சிலர் இரண்டாம் பாங்கு கூறப்பட்ட பிறகும் கடைகளில் வியாபாரம் செய்கின்றனர். அல்லது பள்ளிகளுக்கு முன்னால் தொடர்ந்து பொருட்களை விற்கிறார்கள். அவர்களிடம் வாங்குபவர்களும் பாவத்தில் கூட்டாகின்றனர். மிஸ்வாக் குச்சியை வாங்கினாலும் சரியே. அறிஞர்களின் சரியான கூற்றின்படி இத்தகைய வியாபாரம் தவறானதாகும். ஹோட்டல்கள், பேக்கரிகள் மற்றும் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் சிலர் தங்கள் பணியாளர்களை ஜும்ஆ தொழுகையின் நேரத்தில் வேலை செய்தாக வேண்டும் என்று நிர்பந்திக்கின்றனர். வெளிப்படையில் இத்தகையோரின் இலாபம் அதிகரித்தாலும் உண்மையில் அவர்களுக்கு நஷ்டம் தான் அதிகரிக்கின்றது. ஆனால் பணிபுரியக் கூடியவர்கள் நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியின் தேட்டத்திற்கேற்ப செயல்படுவது அவசியமாகும். ஏனெனில், 'அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் விஷயத்தில் மனிதனுக்குக் கட்டுப்படக் கூடாது' என்பது நபிமொழி. (அஹ்மத்)
எச்சரிக்கை செய்யப்படும் தீமைகள் தொடரும்.